பெப்ரவரி 3 ஆம் திகதி 15 பாடசாலைகள் மூடப்படும்.


கொழும்பு:

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி கல்வியமைச்சினால் விடுமுறையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளுக்காக ஒத்திகை நிகழ்வுகள் நடைபெறவிருப்பதால், ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் சில பாடசாலைகள், சுதந்திரதின நிகழ்வுகளுக்காக ஒத்திகை நிகழ்வுகளின் போது அதில் பங்கேற்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலும் மூடப்படுகின்றன.

விடுமுறை வழங்கப்படும் பெப்ரவரி 3 ஆம் திகதி நாளுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வேறொரு நாளில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பாடசாலைகளின் அதிபர்களை கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சுதந்திரதின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு நகரில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்கும் வகையில் விசேட போக்குவரத்து திட்டங்களும் செயட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post