இந்தியாவில் கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மாணவன் பற்றிய செய்தி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரளாவை சேர்ந்த மாணவனே இவ்வாறு கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
தற்போது கேரளாவிலுள்ள ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவனின் உடல் நிலை சீராகவுள்ளதுடன், தனிமைப்படுத்தப்பட்டு முழுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கொரோனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனா தவிர்ந்த, மலேசியா, இலங்கை உற்பட 17 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் இன்று இந்தியாவில் முதல் கொரோனோ வைரஸ் தொற்று சம்பவம் பதிவாகியுள்ளதுடன், இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.