இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியின் தலைமை பதவிகள் பற்றிய முடிவுகள்.


இலங்கையின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பொறுப்பில் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க நீடிப்பார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் பதவியிலும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூடிய போதே இந்த இரண்டு விடயங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சஜித் பிரேமதாச உட்பட ஆதரவு உறுப்பினர்கள் 35 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post