சீனாவில் முதன் முதலாக பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் இதுவரையில் 100 இற்கும் மேற்பட்டவர்களை காவுகொண்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வைரஸ் தொற்றிக்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இத்துறைசார் நிபுணர்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இவ்வைரஸ் பரவும் வேகத்தை விட இவ்வைரஸ் பற்றிய கட்டுக்கதைகளும், வதந்திகளும் மிக வேகமாக பரவி வருவதாகக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வைரஸ் உருவாகிய விதம், இதை யாராவது வேண்டுமென்றே உருவாக்கினார்களா, அல்லது இது ஓர் உயிரியல் போர் ஆயுதமாக உருவாக்கப்பட்டதா போன்ற தலைப்புக்களில் பல்வேறுபட்ட வதந்திகள் இணையதளங்கள் வழியே மக்களை சென்றடைந்து கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.