அதிகரிக்கும் இறப்புக்க்கள் - சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம்.


கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் மட்டும் 213 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9,000 பேருக்கு மேல் இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியில் 18 உலகநாடுகளை சேர்ந்த 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொடிய உயிர்கொல்லி நோயாக இனங்காணப்பட்டுள்ள இந்த வைரஸின் பரவல் சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்து, சீனாவின் வேறு இரு மாகாணங்களிலும், அதனை தொடர்ந்து ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உற்பட 18 உலக நாடுகளுக்கு பரவிச்சென்றுள்ளது.  இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை (Global Health Emergency) பிரகடனம் செய்தது.

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடுவதில் முழு உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post