இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் சீனர்கள் பஸ் வண்டிகளில் ஏறும்போது, பஸ் வண்டியில் உள்ளே இருப்பவர்கள் இறங்கி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பெரும் அசெளகரியங்களை சந்தித்தது வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 நோயாளிகள் இனங்கனப்பட்டுள்ளதுடன், மேலும் 10 பேர் இதன் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சீனர்களை கண்டால் கொழும்பு மற்றும் அதை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அவர்களை விட்டு சற்று ஒதுங்கி செல்வதாகவும், பஸ் வண்டிகளில் வெளிநாட்டவர்கள் ஏற முயற்சிக்கும் போது, உள்ளே இருக்கும் பயணிகள் இறங்கி செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பஸ்ஸினுள் ஏறும் வெளிநாட்டவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருப்பின், அதன் தொற்று தமக்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது எனும் பீதியில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.