சீனாவின் கொரோனோ வைரஸின் பரவல் சீனா உற்பட உலக நாடெங்கிலும் பெரும் பீதியை கிளப்பிவருகிறது. இதன் பாதிப்பினால் இதுவரையில் 100 மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கானோர் கொரோனோ வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சீனாவின் வுஹான் நகரத்தில் முதன் முதலில் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் பரவலை கட்டுப்படுத்த வுஹான் உற்பட இன்னும் சில நகரங்களை சீன அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதனால் யாரும் இந்நகரங்களுக்குள் நுழையவோ, அல்லது அங்கிருப்பவர்கள் வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நன்சான்ங் பல்கலைக்கழகத்தின் ஒரு இணைப்பு மருத்துவமனையாக கருதப்படும் மருத்துவமனையிலிருந்து கொரோனோ வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்ட ஒரு ஒரு நோயாளி பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளது. இவர் சிகிச்சை முடிந்து வைத்தியசாலையில் இருந்தும் வெளியேறி உள்ளார்.
37 வயதுடைய குறித்த நோயாளி கொரோனோ வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி அதற்கான அறிகுறிகளுடன் குறிப்பிட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி செல்லும் புகைப்படங்களும் இணைய தளங்களில் வெளியாகியுள்ளன.
Post a Comment