சீனாவை விட்டு தற்காலிகமாக வெளியேறும் கூகுள் (Google) நிறுவனம்!


கொரோனா வைரஸின் பரவலை தொடர்ந்து கூகுள் நிறுவனம் உலகெங்கிலுமுள்ள தனது அலுவலங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடிவிட தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இந்த வைரஸ் பரவும் வேகத்தை முன்னெச்சரிக்கையாக சில நாடுகளில் தனது அலுவலங்கங்களை கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடிவிட்டது.

சீனாவின் பல முக்கிய நகரங்களிலும், ஹொங்கொங்கிலும் தனது கிளை அலுவலகங்களை கூகுள் நிறுவனம் கொண்டுள்ளதுள்ளது. கொரோனா வைரஸின் பரவலை தொடர்ந்து அவற்றை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடியுள்ளது.

இதேபோன்று தாய்வான் நாட்டில் இயங்கி வந்த தனது அலுவலகங்களையும் கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post