சீனாவில் இதுவரையில் 106 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இவ்வைரஸினால் தாக்கத்துக்குள்ளான மேலும் 1300 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 2 பேர் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீனப்பயணிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருகை தந்தவுடன் வழங்கப்படும் விசாவினையும் (Visa on arrival) இலங்கை அரசாங்கம் ரத்துசெய்துள்ளது.
மேலும் மறு அறிவித்தல் வரை விமான நிலையத்தினுள் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களை அனுமதிப்பதையும் இலங்கை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
Post a Comment