கொரோனா வைரஸை வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை உள்ளது - சீன ஜனாதிபதி | World News


கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களில் உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே சீனாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் எம்மால் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை உள்ளது என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) தெரிவித்துள்ளார்.

சீனாவை சென்றடைந்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழு, சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கையும்சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி, உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சமூகம் என்பன இவ்வைரஸினை வெற்றிகொள்ள அமைதியா மற்றும் உறுதியான முறையில் பங்களிப்பு செய்யும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸிற்கு இதுவரையில் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையெனினும், இத்துறை சார் நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸின் மரண வீதம் குறைவடையும் என சுவாசக்கோளாறு தொடர்பிலான சீன நிபுணர் சொன் நென்ஷென் தெரிவித்துள்ளார்.

உயிர் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இதனால் ஏற்படும் மரண வீதமும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post