எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் (91) காலமானார்.


எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் தனது 91 வயதில் காலமானார்.

ஓர் சத்திரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹொஸ்னி முபாரக், சத்திரசிகிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கைரோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இவர் உயிரிழந்துள்ளததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட கிளர்ச்சி அலைகளின் விளைவாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஹொஸ்னி முபாரக் சுமார் 30 ஆண்டுகள் (மூன்று தசாப்தங்கள்) எகிப்தை ஆண்டுவந்த ஒரு பலம்மிக்க தலைவராக கருதப்படுகிறார்.
Previous Post Next Post