பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக லக்ஸம்பர்க் (Luxembourg) வரலாற்றில் இணைகிறது. இன்று முதல் அந்நாட்டின் சகல பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
லக்ஸம்பர்க் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அதிக போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கு நடாத்தப்பட்ட கனெக்கெடுப்புக்களின் படி அதிகமான மக்கள் தமது சொந்த வாகனங்களில் அலுவலங்கங்களுக்கு செல்வதாகவும், இதனால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் பொது போக்குவரத்து இலவசமாக வழங்கப்படுவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், புகையிரதத்தில் 1 ஆம் வகுப்பு மற்றும் சில அதி சொகுசு இரவு பஸ் பயணங்கள் இந்த இலவச சேவையில் உள்ளடங்குவதிலை எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கும் இத்திட்டத்தினை பலரும் வரவேற்றுள்ளதுடன், வருடம் தோறும் அந்நாட்டு மக்களின் போக்குவரத்து செலவு குறிப்பிடத்தகக்க அளவில் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.