பியர் கம்பெனியில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி!


அமெரிக்காவின் விஸ்கொன்சின் பிராந்தியத்தில் உள்ள மில்வாக்கி நகரில் உள்ள ஓர் பியர் கம்பெனியில் தீடீர் என நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிதாரி மில்வாக்கி நகரில் வசித்து வந்த 51 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரையில் சரியாக தெரியவில்லை.

குறித்த பியர் கம்பெனியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேரும் குறித்த பியர் கம்பெனியில் வேலைசெய்து வந்த ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டின் பின்னர் குறித்த 51 வயதுடைய துப்பாக்கி தாரி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டினை தொடர்ந்து அப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post