தாய்லாந்து கொலையாளியின் தாய் வெளியிட்டுள்ள தகவல்!


நேற்று தாய்லாந்தில் 'ஜாக்ரபந்த் தொம்மா' எனப்படும் இராணுவ வீரர் ஓர் வணிக வளாகத்தில் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நிகழ்த்திய சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது. இதில் சுமார் 29 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில் இருந்து 250 km தூரத்தில் உள்ள 'நகோன் ராட்சசிமா' எனப்படும் நகரத்தில் உள்ள ஓர் வணிக வளாகத்திலேயே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

துப்பாக்கி சூடு நடத்திய நபர் தான் துப்பாக்கி சூடு நடத்தப்போவதை முகநூலில் நேரலையில் தெரிவித்திருந்தார், மற்றும் இது தொடர்பில் புகைப்படங்களையும் பதிவேற்றியிருந்தார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னர் கொலையாளி குறித்த வணிக வளாகத்தில் பிணைக் கைதிகளுடன் மறைந்திருந்தார்.  வணிக வளாகத்தில் மறைந்திருந்த கொலையாளியை வெளியில் கொண்டுவர தாய்லாந்து பொலிஸாரினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் கொலையாளியை வெளியில் கொண்டுவரும் ஓர் முயற்சியாக அவரது தாய் வரவழைக்கப்பட்டு கொலையாளியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது கொலையாளியின் தாய், தனது மகனுடன் போசுவது அவ்வளவு சாத்தியப்படாது  எனவும் அவன் உளச்சோர்வினால் (Depression) மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், மேலும் கடுமையாக கோபப்படக் கூடியவன் எனவும் தெரிவித்துள்ளார். குறித்த கொலையாளி பல நாட்களாக குடும்பப் பிரச்சினைகளுடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல மணிநேரம் நடைபெற்ற தேடல்களின் பின்னர் தலைமறைவாகி இருந்த கொலையாளி தாய்லாந்து நாட்டின் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
Previous Post Next Post