கொழும்பு:
கொழும்பு நகரில் அதிகரித்து வரும் வாகன நெரிசலால் நகரினுள் உள்ள பல வீதிகளிலும் வாகன போக்குவரத்து தாமதமடைந்து வருகிறது. இதனை சரி செய்யும் நோக்கில் போக்குவரத்து பொலிஸாரின் உதவிக்கு படையினரையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தரைப்படை இராணுவத்துடன் இணைந்து கடற்படை மற்றும் விமானப் படையினரும் தற்காலிகமாக போக்குவரத்து பொலிஸாரின் உதவிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகனங்களில் பயணிப்பவர்களின் பயணத்திற்கான நேரத்தையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிக எரிபொருள் செலவு மற்றும் கொழும்பு நகரில் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையினால் ஏற்படும் வளி மாசடைதலையும் குறைக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.