கொரோனா வைரஸினால் ஈரானில் மட்டும் 210 பேர் உயிரிழந்திருப்பதாக பிபிசி பிராந்திய செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஈரான் அரசாங்கத்தினால் இதுவரையில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு சவால் விடும் வகையில் கருத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரையில் எந்த பதிலையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலும், கைம் நகரிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு மீள் அறிவித்தல் வரும் வரை ஈரான் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.