கொரோனா வைரஸ் தீவிரவாதத்தையும் மிஞ்சிவிட்டது. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!


உலக சுகாதார அமைப்பினால் தற்போது சீனா உற்பட உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸிற்கு COVID-19 எனும் புதிய பெயர் சூட்டப்பட்டுளள்து.

இதுவரையில் சுமார் 45,000 பேரை அண்மித்து தாக்கியுள்ள கொரோனா வைரஸ், 1,100 இற்கு மேற்பட்ட உயிர்களை காவுகொண்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் உலகில் தீவிரவாதத்தையும் தாண்டி மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள 'நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடிய மிக மோசமான ஓர் எதிரி (the worst enemy you can imagine)' இந்த கொரோனோ வைரஸ் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அனைவரும் கொரோனோ வைரஸிற்கு எதிராக வீரியமாக எழுந்து நிற்க வேண்டும். இது பரவுவதை கண்டறியவும், அதனை தடுக்கவும் உரியவகையில் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் கொரோனா வைரஸிற்கு சூட்டப்பட்டுள்ள COVID-19 எனும் பெயருக்கு பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

CO - corona
VI - virus
D - disease
19 - 2019

சீன சுகாதார அதிகாரிகளின் கருத்தின்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் கொரோனா வைரஸினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியும் எனினும் உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரிகள் அதற்கு மேலும் ஓரளவு காலம் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இதற்கான தடுப்பூசி (vaccine) தயாராக இன்னும் 18 மாதங்கள் அளவில் தேவைப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கிடையில் கொரோனா வைரஸ் உலக நாடுகளின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புக்களில் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் என்பது தற்போதைய உலகில் தீவிரவாதத்தை தாண்டியும் நீங்கள் நினைத்துப் பார்க்கக் கூடிய மிக மோசமான ஓர் எதிரி எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா வைரஸிற்கு பெயர் சூட்டும் போது, உலகின் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ, அல்லது மக்களையோ அல்லது ஒரு விலங்கையோ புதிய பெயரில் உள்வாங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post