கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 95% பேர் குணமடைகின்றனர் - உலக சுகாதார அமைப்பு



கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகளாவிய ரீதியில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 95% பேர் குணமடைந்துள்ளனர் அல்லது குணமடைந்து வருகின்றனர். எனினும் இது ஒரு பிரதேசத்தை இன்னும் பலமாக தாக்கும் போது மேலும் பல மரணங்களை ஏற்படுத்தக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும், இதனால் பாதிக்கப்பட்ட அதிகளவானோர் இலேசான அறிகுறிக்களையே வெளிப்படுத்துகின்றனர். இதில் சிலரை மட்டும் இது பலமாக தாக்குகிறது.

இதுவரையில் உள்ள கணக்கெடுப்பின்படி சிறுவர்கள் இதனால் பாதிக்கப்படும் வீதம் ஒப்பீட்டளவில் குறைவாகவும், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளவர்களை இது பலமாக தாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் படி, 60 வயதை தாண்டிய சுகாதார ஊழியர்களும், முதியவர்களும், வேறு நோய்களின் தக்கத்துக்குள்ளாகியுள்ள உடல் பலவீனமுடையவர்களிலும் கொரோனா வைரஸ் தாக்கப்படும் வீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post