செல்வந்தர்களிடம் இருந்து உங்களால் எதை திருட முடியும்?


உலகில் சாமானியர்களாக பிறந்து இன்று சமூகத்தில் உயர்ந்து நிற்கும் பலரதும் ஆரம்பகட்ட வாழ்கை மிகவும் கடினமானதாகவே இருந்திருக்கும். இருந்தும் அவர்களின் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் அவர்களின் இன்றைய வாழ்வை அவர்களுக்கு பிடித்தாற்போல் மாற்றியமைத்துள்ளார்கள்.

அப்படியென்றால் அவர்களின் வாழ்வில் இருந்து உங்களால் எதை தான் திருட முடியும்? ஆம், அவர்கள் இந்த நிலையை அடைய பயன்படுத்திய உத்திகளையும் அதற்காக அவர்கள் புதிதாக உருவாக்கிக்கொண்ட பண்புகளையும் உங்களால் திருட முடியும். அவ்வாறானவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

1. புதிய விடயங்களை கற்றுக்கொள்ளல் 

வாழ்வில் முன்னேறியவர்கள் எப்போதும் புதிதாக எதையவது கற்றுக்கொள்ளவே முயற்சிப்பார்கள். தாம் குறைவாக பேசுவதோடு, மற்றவர்கள் பேசுவதற்கு செவிசாய்க்கப் பழகியிருப்பார்கள். மற்றவர்கள் பேசும் விடயங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

2. அதிஷ்டத்தை விட தன்னம்பிக்கைக்கு முதலிடம் கொடுப்பார்கள்.

வாழ்வில் முன்னேறியவர்கள் ஒருபோதும் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் தாண்டி அதிஷ்டத்திற்கு வாழ்வில் முதலிடம் கொடுக்க மாட்டார்கள். திடீரென அதிஷ்டம் அடித்து முன்னேறியவர்களின் வாழ்க்கை தொடர்ந்து அவ்வாறு நிலைப்பதில்லை. இதுவே யதார்த்தமான உண்மை.

3. வாசிப்பு

வாசிப்பு மனிதனை முழு மனிதனாக்கும் என்பார்கள். வாசிப்பு புதிய சிந்தனைகள் தோற்றுவிக்கவும் வழிவகுக்கும். இதனால் வாழ்வில் முன்னேறியவர்கள் தங்கள் வாழ்வில் வாசிப்பு பழக்கத்தை அர்த்தமுள்ள முறையில் வைத்திருப்பார்கள்.

4. சிக்கனம் மற்றும் சேமிப்பு.

வாழ்வில் முன்னேறியவர்கள் பற்றி அமெரிக்காவில் நடாத்திய ஆய்வொன்றில் இவர்களில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்ட் உபயோகப்படுத்தாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சேமிப்பு என்பது இவர்களிடம் இருந்து வந்துள்ள ஒரு பொதுவான பழக்கம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் நினைப்பதற்கு மாறாக, கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் எவரும் வீணான மற்றும் வேடிக்கையான விடயங்களுக்கு தமது பணத்தை செல்வழிப்பதும் அரிது.

5. தேக ஆரோக்கியம்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.' வாழ்வில் முன்னேறும் அவசரத்தில் பலரும் மறந்துவிடும் ஒருவிடயம் தான் தேக ஆரோக்கியம். உண்மையில் வாழ்வில் முன்னேற்றம் என்பது பொருளாதார முன்னேற்றம் என மட்டும் கருதுவது தவறு. வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் தினசரி தேக ஆரோக்கியத்துக்கென நேரத்தை ஒதுக்குவது வழக்கம்.

6. இலக்குகளை வகுத்தலும், அவற்றை அடையும் காலத்தை நிர்ணயித்தலும்.

வாழ்வில் முன்னேறிய ஒவ்வொருவரும் வாழ்வின் இலக்குகளை அடையாளப்படுத்தி, அவற்றை அடைவதற்கான கால வரையறையினையும் தீர்மானித்து வைத்திருப்பார்கள். அத்துடன் குறிப்பிட்ட காலத்தினுள் அவர்கள் நினைத்த இலக்கை அடைய விடாமுயற்சியுடன் பாடுபடுவார்கள்.

7. தோல்விகளையும், சவால்களையும் எதிர்கொள்ளல்.

பலரது வாழ்விலும் முன்னேற்ற்றத்துக்கு தடையாக இருப்பது தாம் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயம் தான். மேலும் சிலர் தாம் செய்யப்போகும் காரியங்களில் உள்ள சவால்களுக்கு பயந்தே அதை செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்.

ஒரு முறை தோற்றுவிட்டால் வாழ்க்கையே தோற்றுவிட்டதாக சிலர் நினைப்பார்கள். இதனால் பலரது வாழ்க்கைப் பயணமே வேறு திசையில் மாறிவிடும். ஆனால், வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் தோல்வியை ஒரு பாடமாக மட்டும் கருதி மீண்டும் மீண்டும் முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். இறுதியில் அதில் வெற்றியும் அடைவார்கள். 
Previous Post Next Post