இந்தியா/புதுடில்லி:
சூரிய ஒளி வெளிச்சத்தில் பொதுமக்கள் நின்றால் கொரோனா போன்ற வைரஸ் நோய்கள் காணாமல் போய்விடும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயினால் சுமார் 8,000 இற்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 180 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சூரிய ஒளி வெளிச்சத்தில் பொதுமக்கள் நின்றால் கொரோனா போன்ற வைரஸ் நோய்கள் காணாமல் போய்விடும் என மத்திய குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே ஊடங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. சூரிய ஒளி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைதருகிறது. கொரோனா வைரஸ் போன்ற வைரஸ் நோய்களையும் கொல்லும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு. மக்கள் தமது உடலில் சூரிய ஒளி படும் வகையில் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வரை அமர்ந்திருந்தால் அவர்கள் குணமடைவர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.