ஐக்கிய அரபு அமீரகம்:
கொரோனா வைரஸ் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்ட ஒழுங்குகளை மீறினால் 50,000 திர்ஹங்கள் வரை அபராதம் விதிக்கப்படுமென ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இது இந்திய ரூபா மதிப்பில் சுமார் 1 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும்.
ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்படாமல் வீட்டை விட்டு காரணமின்றி வெளியே வருபவர்களுக்கு 2,000 திர்ஹங்களும், தமக்கிடையே போதியளவு தூரம் இல்லாமல் உலாவுகின்றவர்களுக்கு 1,000 திர்ஹங்களும், மேலும் இதுபோன்ற சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு 500 தொடக்கம் 50,000 திர்ஹங்கள் வரை தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.