எம்மிடம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை - வட கொரியா


எம்மிடம் ஒரு கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளான நோயாளி கூட இல்லை என வட கொரியா அறிவித்துள்ளது. வட கொரியாவின் எல்லைகளை மூடுதல், சீனாவுடனான போக்குவரத்து / வர்த்தக தொடர்புகளை துண்டித்தல் போன்ற விடயங்களை முறையாக மேற்கொண்டதன் விளைவாக கொரோனா வைரஸ் நாட்டினுள் வருவதை தடுத்ததாக அந்நாட்டு அதிபர் கிம் ஜான்ங் உன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனாவையும், தென் கொரியாவையும் அயல் நாடுகளாக கொண்டுள்ள வட கொரியா, தம்மிடம் கொரோனா தொற்றுள்ள ஒரு நோயாளி கூட இல்லை என அறிவித்ததில் நம்பகத்தன்மை இல்லை என்றே சீனா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கருதுகின்றன.

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட 5,400 பேரில் ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post