கென்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓர் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த உலகின் ஒரே பெண் வெள்ளை ஒட்டகச் சிவிங்கியும் அதன் குட்டியும் வேட்டைக்காரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகளாவிய அளவில் சுற்றுலா பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கென்யாவின் கரிசா பகுதியில் இவற்றின் சிதைந்த உடல் எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன்.
இந்த வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகளுக்கென சுற்றுலா பயணிகளிடையே தனியான ஓர் ஈர்ப்பு காணப்பட்டதாகவும், தற்போது இவை இரண்டும் வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அப்பிரதேசத்தின் சுற்றுலா பெறுமதியும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை பெண் ஒட்டகச் சிவிங்கிக்கு இரண்டு குட்டிகள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று தாயுடன் சேர்த்து கொல்லப்பட்டுள்ளதுடன், ஒரு குட்டி மட்டும் எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது முழு உலகிற்கும் இந்த ஒரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கிக் குட்டி மாத்திரமே உள்ளது.
இந்நிலையில், இவ்வெள்ளை பெண் ஒட்டகச் சிவிங்கியை பற்றி ஆய்வு செய்து வந்த ஆய்வுக்கு குழுவின் முழு முயற்சியும் இவற்றின் கொலையுடன் முழுதாக வீணடிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆய்வுக்குழு கவலை வெளியிட்டுள்ளது.