முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்கள் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்து பேசியுள்ள கம்ரான் அக்மல் இந்தியாவின் கிரிக்கெட் அணி மிகவும் வலுவடைந்த ஒரு நிலையில் உள்ளதாகவும், மூன்று வெவ்வேறு அணிகளை களமிறக்கி விளையாடும் அளவுக்கு இந்திய அணி பலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி அடிமட்டத்தில் இருந்தே இந்தவொரு தலையீடுகளும் இல்லாமல் பரிபாலிக்கப்படுவதாகவும், இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் செயற்படுவதாகவும் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் மற்றுமொரு குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ளஉள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் C அணியை களமிறக்கினாலும் இலங்கை அணியை இலகுவாக வீழ்த்த முடியும் என கம்ரான் அக்மல் தெரிவித்த கருத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் புரளியை ஏற்படுத்தியுள்ளது. கம்ரான் அக்மலின் இந்தக் கருத்தை எதிர்த்து தற்போது அவரின் முகநூல் பக்கத்தை நோக்கி இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Post a Comment