நண்பர்களே, இன்று நான் உங்களுக்கு சொல்லித்தரப் போகும் விடயம் ஒரு மாதத்தினுள் இணையதளம் ஒன்று இல்லாமலேயே எப்படி 200 டாலர்கள் முதல் 250 டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும் என்பது பற்றித் தான்.
இங்கே தரப்பட்டுள்ள மூன்று படிமுறைகளையும் (3 Steps) வாசித்ததன் பின்னர் மட்டுமே இது உங்களால் முடியுமா அல்லது முடியாதா என்ற முடிவுக்கு வாருங்கள்.
உங்களுக்கே தெரியும் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. அதற்கு நிறையப் பொறுமையும், சற்று அனுபவமும் தேவைப்படுகிறது. இதை செய்வதற்கு உங்களுக்கு எந்தவொரு முன்னனுபவமும் தேவையில்லை.
பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்க உங்களிடம் ஒரு இணையதளம் இருக்க வேண்டும் அல்லது ஒரு YouTube சேனலேனும் இருக்க வேண்டும். இவற்றை தவிர்த்து வேறு சில வழிகளும் இருக்கவே செய்கின்றன.
நான் இன்று இங்கே உங்களுக்கு சொல்லித்தரும் விடயம், உங்களுக்கென்று ஒரு இணையத்தளமோ அல்லது YouTube சேனலோ இல்லாமல் உங்களால் இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிக்க முடியும் என்பது பற்றித் தான்.
இந்தக் கட்டுரையை எழுத முன்னர் சில முக்கிய விடயங்களை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் இங்கே கூறும் இந்த முறையைப் பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்க உங்களிடம் கொஞ்சம் பொறுமை இருக்க வேண்டும், அத்துடன் இதற்கான முயற்சியும் உங்களிடம் இருக்க வேண்டும்.
மேலும் இங்கே நான் சொல்லித்தரும் முறையினை பின்பற்றினால், நான் மேலே கூறிய அளவு பணத்தை சம்பாதிக்க முடியுமான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. நான் இதனை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னரே உங்களிடமும் கூறுகிறேன்.
இது இணையத்தில் தங்கள் முதல் சில டாலர்களை சம்பாதிக்க முயற்சிப்பவர்களுக்கு மிகவும்பொருத்தமானதாக அமையும்.
Step 01
Bluehost இணையத்தளத்தினுள் செல்லுங்கள், அங்கே Affiliate எனும் ஒரு பகுதி உள்ளது. அங்கே சென்று Sign up இணை அழுத்தி உங்களுக்கென ஒரு Affiliate கணக்கை உருவாக்கிகொள்ளங்கள்.
(Bluehost என்பது வெப் ஹோஸ்டிங் (Web Hosting) துறையில் உள்ள ஒரு முன்னணி மற்றும் பிரபலமான இணையதளமாகும்)
உங்கள் தகவல்களை வழங்கி ஒரு Affiliate கணக்கை உருவாக்கிக்கொண்டதும், இங்கே கீழே படத்தில் தரப்பட்டுள்ளவாறு link எனும் பகுதியுனுள் சென்றால் உங்கள் Affiliate link இனைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த Affiliate link இனைக் கொண்டு யாராவது ஒருவர் Bluehost இணையதளத்தில் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) சேவையைப் பெற்றுக்கொள்ள தங்களை பதிவு செய்துகொண்டால், உங்களுக்கு 65 டாலர்கள் முதல் 100 டாலர்கள் வரை Commission ஆக கிடைக்கும்.
Step 02
இந்த Affiliate link இனை நீங்கள் யாரிடம் கொடுக்கப் போகிறீர்கள்? உங்கள் இந்த Affiliate link இனை உபயோகித்து யார் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) சேவையைப் பெற்றுக்கொள்வார்கள்?
இதற்கான விடை Quora.com மற்றும் Reddit.com போன்ற Forum இணையதளங்களில் உள்ளது. Quora.com மற்றும் Reddit.com என்பவை சமூக வலைதளங்களைப் போலவே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், கேள்விகளுக்கு விடை தேடவும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபல்யமான இணையதளங்களாகும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இந்த இரு இணையதளங்களில் ஒன்றில் அல்லது இரண்டிலும் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் இவ்விணையதளங்களில் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) உடன் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் விடையுடன் உங்கள் Affiliate link இனை இணைத்துவிடலாம். நீங்கள் 10 கேள்விகளுக்கு விடையளித்தால், 3 அல்லது 4 விடைகளில் மட்டும் உங்கள் Affiliate link இனை இணையுங்கள். காரணம், இந்த இணையதளங்களில் வழமைக்கு மாறாக நடைபெறும் உங்கள் செயற்பாடுகள் Spam ஆக கருதப்பட்டு, உங்கள் கணக்கு முடக்கப்படும் அல்லது மற்றும் உங்கள் கணக்கு ரத்துசெய்யப்படும். ஆகவே அவதானமாக செயற்படுங்கள்.
முகநூலில் (Facebook) இதை முயற்சிக்க வேண்டாம், அங்கே Affiliate link போன்றவை வரவேற்கப்படுவதில்லை.
Step 03
வெப் ஹோஸ்டிங் (Web Hosting) பற்றிய கேள்விகளுக்கு விடை எங்கிருந்து கிடைக்கும்? வேறு எங்கும் இல்லை, Google வழியாக உங்களளால் இவற்றுக்கான விடையினை இலகுவில் தேடிக் கண்டுபிடித்துவிட முடியும்.
சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் முயற்சித்தால் Quora மற்றும் Reddit தளங்களில் நீங்கள் வழங்கும் பதில்கள் மூலம் ஒரு மாதத்தில் ஒருவரையாவது Affiliate link இனை உபயோகித்து Bluehost இணையதளத்தில் பதிவுசெய்ய முடியாதா? ஒரு பதிவுக்கு மட்டுமே மேல் கூறிய தொகை. உங்கள் Affiliate link வழியாக செய்யப்படும் ஒவ்வொரு பதிவுக்கும் அதே தொகை Commission ஆக மீண்டும் மீண்டும் வழங்கப்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
மேலும் இணையத்தில் பணம் சம்பாதிக்க இருக்கும் வழிகளில் இதுவும் ஒன்று மட்டுமே, தவிர இதை மட்டும் வைத்து நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. இந்த முறை இன்றளவில் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் பணம் சம்பாதிப்பதை ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றிய பிரபல்யம்பெற்ற YouTube சேனல்கள் கூட பரிந்துரைக்கின்றன.
ஆங்கில அறிவு மற்றும் கணனி அறிவு இல்லாமல் இதை செய்ய முடியாது என்று கருதுபவர்களுக்கு இது பற்றிய ஒரு காணொளி விரைவில்.
Post a Comment