இந்தியாவின் உத்திர பிரதேசத்தை சேர்ந்த நேஹா பாஸ்வான் எனப்படும் 17 வயதான இளம் பெண் ஜீன்ஸ் அணிந்ததற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சிலரால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் இவ்வாறான அநாகரிகமான சம்பவங்கள் தொடராக பதிவாகிவருகின்றன.
நேஹாவின் தாயாரான சகுந்தலா பாஸ்வான் தெரிவிக்கையில், தங்கள் வீட்டில் வைத்து நேஹாவின் உடை தொடர்பில் நேஹாவுக்கும் அவரது தாத்தா மற்றும் மாமாமார்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த சம்பவத்துக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
"ஜீன்ஸ் என்பதும் ஒரு உடை தான், அதுவும் அணிவதற்காவே தயாரிக்கப்பட்டுள்ளது" எனும் தனது தாத்தாவை நோக்கிய நேஹாவின் எதிர்வாதமே இவ்வாறு அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலைசெய்ப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைத்துள்ளது.
நேஹாவை தேடி வைத்திய சாலைக்கு செல்ல முடியாமல் நேஹாவின் தாயாருக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் மறுநாள் காலையில் நேஹாவை தேடும் போது கொல்லப்பட்ட நேஹாவின் உடல் ஒரு ஆற்றின் பாலத்தின் கீழ் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட நேஹாவின் தாத்தா, மாமாக்கள், உறவினர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் என 10 பேர் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழிக்க முற்பட்டமைக்காக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment