போலீசாருக்கு இரு மடங்கு அபராதம்... அதிரடி முடிவு..!


இந்தியா | லக்னோ:

உத்தர பிரதேச போலீசார் சாலை விதிகளை மீறினால் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மாநில போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு ரூ.1,000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச போலீஸ் ஆணையர் ஓபி சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில போலீசார் அனைவரும் அரசு மற்றும் தனியார் வாகனங்களை ஓட்டும்போது நிச்சயம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

ஒருவேளை போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்க தவறினால் அவர்களுக்கு பொதுமக்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை விட இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source - மாலை மலர்

Post a Comment

أحدث أقدم