கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த 8 பேருக்கு பொது இடங்கள் தடை..!


சீனாவில் இருந்து வந்த 8 பேருக்கு பொது இடங்கள் தடை..!

சீனாவின் ஹூ பெய் மாகாணத்தின் வுகான் நகரில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் வெளியாகின.

கொரோனா வைரஸ் தக்கத்துக்குள்ளாகி இதுவரை 80 உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 29,700 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலக நாடுகள் முழுவதும் இந்த வைரசின் தாக்கம் ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 8 பயணிகள் சீனாவிலிருந்து நாடுதிரும்பிய போது கோவை விமான நிலையத்தில் வைத்து சுகாதாரதுறை அதிகாரிகளால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதன் அவர்களுக்கு இவ்வைரஸ் தாக்கம் இல்லையென்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இவர்கள் 8 பெரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் எனினும் தொடர்ந்து 28 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

أحدث أقدم