யாழ்ப்பாணம் - கொழும்பு, புதிய விமான சேவை!


கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு நாளை முதல் புதிய உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 7:30 மணிக்கு கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் விமானம் தினமும் காலை 8.20 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

இதேபோன்று தினமும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முற்பகல் 9.30 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் விமானம் முற்பகல் 10.20 மணிக்கு கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை வந்தடையும்.

பயணிகள் கட்டணமாக 7,500/- ரூபா  செலுத்தப்பட  வேண்டும். பயணிகளின் பயணப்பொதிகளை பொருத்தவரையில், 20 kg பயணப்பொதியாகவும், 4 kg கைவசமும் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
أحدث أقدم