பெப்ரவரி 1 ஆம் திகதி தூக்கு தண்டனை - நீதிமன்றம் உத்தரவு!


டெல்லியில் 2012 ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பேரூந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான 6 பேரில் ஒருவர் திகார சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மேலும் ஒருவர் குற்றத்தின் போது சிறுவன் என்ற காரணத்தை முன்னிட்டு குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலையானார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கு 2017 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இக்குற்றவளிகளில் ஒருவரான அக்ஷ்ய்குமார் துக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கோரி  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதற்கு முன்னரும் இக்குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவும் நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய இக்குற்றவாளிகள் 4 பேருக்கும் பெப்ரவரி 1 ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
أحدث أقدم