யாழ்ப்பாணம்:
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்தின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , நாவற்குழி பிரதேசத்தில் வைத்து இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை நடத்திய சோதனையில் பேரூந்தின் சாரதி மதுபானம் அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது. சாரதியின் இருக்கைக்கு அருகாமையில் மதுபான போத்தல்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பயணிகளை மற்றுமொரு பேரூந்தில் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பேரூந்தில் பயணித்த பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.