நைஜீரியாவில் பரவும் 'லஸ்ஸா' காய்ச்சல் - 70 பேர் பலி .


நைஜீரியா நாட்டில் பரவிச்செல்லும் 'லஸ்ஸா' காய்ச்சல் காரணமாக இதுவரையில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய நிலையத்தின் கணக்கெடுப்புக்கு அமைய இதுவரையில் 472 பேர் 'லஸ்ஸா' காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுளள்னர். இதில் 4 சுகாதாரத்துறை ஊழியர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிபடப்பட்டுள்ளது.

'லஸ்ஸா' காய்ச்சல் ஏற்படுவதற்கு Rodent எனப்படும் எலிகளின் சிறுநீர், மலம் என்பன உணவுகளில் கலப்பதே முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு தொற்று நோய் என்பதால் இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றையவர்களுக்கும் இது பரவிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பினால் இந்நோய்க்கு Ribavirin எனப்படும் மருந்து பரிந்துரைக்கப்பட்டாலும், நோயின் ஆரம்ப கட்டத்தில் இம்மருந்து கொடுப்பட்டால் மட்டுமே சிகிச்சை அதிக பலனளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளை அதிகளவில் தாக்கும் இந்நோயினால் வருடத்திற்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், இதில் சுமார் 5,000 இறப்புக்கள் நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
أحدث أقدم