BREAKING NEWS: மத்திய கிழக்கில் மீண்டும் பதட்டம், போர் சூழும் அச்சம்!


ரஷ்யாவின் ஆதரவுடன் செயற்படும் சிரியா நாட்டின் படைகளின் தாக்குதலினால் துருக்கி நாட்டின் 33 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரியா நாட்டின் இராணுவத்தினால் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களாலேயே துருக்கி இராணுவ வீரர்கள் 33 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ரஷ்யா இந்த தாக்குதல்களுக்கு துணைபோகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், துருக்கியின் ரஷ்யா 33 வீரர்களின் மரணங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டின் 33 இராணுவ வீரர்களினதும் மரணம் மற்றும் அதற்கு காரணமாக இருந்த ரஷ்யாவின் ஆதரவுடன் செயற்படும் சிரியா நாட்டின் படைகளின் வான்வழி தாக்குதல், துருக்கி - சிரியா - ரஷ்யா நாடுகளுக்கிடையில் போர் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
أحدث أقدم