சீனாவுக்கு வெளியில் இதுவரையில் 4,400 பேருக்கு மேல் பாதிப்பு; 80 மரணங்கள்!


சீனா தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் கொரோனா வைரஸின் பரவல் வேகமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. சீனாவுக்கு வெளியில் இதுவரையில் 4,400 பேருக்கு மேல் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு சீனாவுக்கு வெளியில் 70 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு சம்பவத்தினை அந்நாட்டு அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் ஸ்பெயின், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் பல பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் இதுவரையில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸினால் அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளான இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் நிலமை இன்னும் மோசமடைந்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இதுவரையில் 78,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,788 மரணங்கள் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அங்கே நிலைமை இன்னும் மோசமாக இருக்கலாம் எனவும் சில சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன.

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரங்கள்:

ஆசியா:

தென் கொரியா - 2,022 பேர் பாதிப்பு, 13 மரணங்கள்.

மத்திய கிழக்கு: ஈரான்  - 245 பேர் பாதிப்பு, 34 மரணங்கள்.

ஐரோப்பா:

இத்தாலி - 650 பேர் பாதிப்பு, 17 மரணங்கள்.

அவுஸ்திரேலியா:  

அவுஸ்திரேலியா - 22 பேர் பாதிப்பு, நியூசிலாந்து  ஒருவர் பாதிப்பு.
மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

வட அமெரிக்கா:

ஐக்கிய அமெரிக்கா - 60 பேர் பாதிப்பு, மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

ஆபிரிக்கா: 

அல்ஜீரியா, எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். மரணங்கள் பதிவாகவில்லை.

தென் அமெரிக்கா:

பிரேசில் - 1 ஒருவர் பாதிப்பு.

அதனடிப்படையில் அண்டார்டிகா தவிர்ந்த உலகின் அனைத்து கண்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
أحدث أقدم