கொரோனா வைரஸ் - மக்கா யாத்திரைக்கு வீசா ரத்து!


சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து செல்லும் நிலையில், சீனாவுக்கு வெளியில் உலகின் ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தக்கத்துக்குள்ளான புதிய சம்பவங்கள் தற்போது சீனாவுக்கு வெளியில் அதிகளவில் பதிவாகியுள்ளன.

ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் ஏனைய சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரானை பலமாக தாக்கியுள்ள கொரோனா வைரஸ் ஈரானில் இருந்து ஏனைய நாடுகளுக்கும் பரவிச் செல்லும் அபாயம் உருவாகியுள்ளது. ஏற்கனவே, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நாடுகளில் இருந்து மக்கா யாத்திரைக்கு வரும் யாத்திரிகளுக்கு வழங்கப்படும் வீசாவினை சவூதி அரேபிய அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
أحدث أقدم