தோல் / இறைச்சிக்காக பிராணிகள் தகாத முறையில் கொலை!


சீனாவில் எனக்கூறப்படும் காணொளியில், தோல் மற்றும் இறைச்சிக்காக பிராணிகள் தகாத முறையில் கொலைசெய்யப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட இந்த காணொளி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக்கியமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இக்காலக்கட்டத்தில், இதில் உள்ள காட்சிகளை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சிலர் கொரோனா வைரஸ் ஏற்பட்டதற்கு இவ்வாறான மனித நேயமற்ற செயல்களினால் ஏற்பட்ட சாபம் தான் காரணம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் தேவைக்காக ஒரு விலங்கை கொள்வதாயியும் அதற்கான ஒரு நடைமுறை உள்ளதாகவும், இவ்வாறு அவற்றை கொன்று குவிப்பது மனிதத்தனமற்ற கேவலமான செயல் எனவும் சிலர் கருத்துப் பகிர்ந்துள்ளனர்.

காணொளி இணைப்பு

கவனிக்கவும் - இக்காணொளியில் விலங்குகளை கொள்ளும் கொடூரமான காட்சிகள் உள்ளதால், பலவீனமானவர்கள் இதனை பார்க்கவேண்டாம்.

சீனாவின் உள்ளூர் சந்தைகளில் அந்நாட்டு அரசு தடைவிதித்த சில மிருகங்கள் இன்னும் மறைமுகமாக விற்கப்படுவதாகவும், இதுவும் தற்போதைய உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவ ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் சில சர்வதேச ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
أحدث أقدم