கொரோனோ வைரஸ் - பாதிப்புக்குள்ளான பச்சிளம் குழந்தை!


கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல உலக நாடுகளிலும் பல்வேறு விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் இன்றுடன் இவ்வைரஸ் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 565 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனா உற்பட உலகளாவிய ரீதியில் இதுவரையில் 28,273 பேருக்கு இவ்வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவுக்கு அடுத்ததாக ஜப்பானில் 45 பேர் இவ்வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே சீனாவுக்கு வெளியில் வேறு ஓர் நாட்டில் கணக்கிடப்பட்ட அதி கூடிய எண்ணிக்கையாகும்.

இந்நிலையில் வுஹான் நகரில் பிறந்த ஓர் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட தாய் ஒருவருக்கு பிறந்த இந்த குழந்தைக்கு பிறந்து வெறும் 30 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 2 ஆம் திகதி பிறந்த இக்குழந்தையில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டலும், இக்குழந்தை இதுவரையில் சாதாரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

أحدث أقدم