கொரோனா வைரஸ் (COVID-19) தாக்கத்திற்கு உட்பட்டிருந்த சீன சுற்றுலா பயணி ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதை பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சும் உறுதி செய்துள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த 80 வயதுடைய ஆண் சுற்றுலா பயணி பரிஸ் நகரின் ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களில் சீனாவுக்கு வெளியில் பதிவான நான்காவது மரணமாகும்.
கொரோனா வைரஸ் தாக்கி இதுவரையில் 1525 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 67,000 பேர் அளவில் பாதிப்படைந்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பித்து ஏனைய உலக நாடுகளுக்கும் பரவிச்சென்றுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.