கொரோனா வைரஸ் - பணத் தாள்களை எரிக்கும் சீனா!


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,776 ஆக அதிகரித்துளளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை 70,000 ஐயும் தாண்டிவிட்டது. சீனாவை பெருமளவில் தாக்கியுள்ள இந்த வைரஸ் காரணமாக சில நகரங்களுக்கு இன்னுமும் பூட்டுப்போடப்பட்டுள்ளன. அங்கே வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மூடப்பட்டுள்ள நகரங்களில் வாழும் மக்கள் தினமும்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய விடயங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன. மேலும் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படும் அளவை விட அதிகம் எனவும் சில ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

எவ்வாறாயினும், சீனாவினுள் இவ்வைரஸின் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பகுதிகளில் உள்ள நாணயத் தாள்களை அழித்து விட்டு புதிய நாணயத் தாள்களை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
أحدث أقدم