பாகிஸ்தானில் இந்துக்கள் மீது கைவைத்தால் கடும் நடவடிக்கை - இம்ரான் கான் எச்சரிக்கை.


பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் அல்லது சிறுபான்மை மக்கள் மீது கைவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்று வந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடைமைகள் நாசம் செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஓர் மசூதி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள், அங்குள்ள இந்துக்கள் மீதோ அல்லது அவர்களின் வணக்கஸ்தலங்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்க முயன்றால் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாக்கிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் எல்லாவகையிலும் சம உரிமையுள்ள நாட்டின் பிரஜைகள் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான் பதிவிட்டுள்ளார். 


இதற்கு முன்பும் இந்தியாவின் பாபர் மஸ்ஜித் சம்பவத்தின் போதும், பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மீது வன்முறைகள் இடம்பெற்றன. இதனை கருத்திற்கொண்டு இம்ரான் கான் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
أحدث أقدم