சுட்டு வீழ்த்தப்பட்ட சவூதி அரேபியாவின் போர் விமானம்?


சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு சொந்தமான போர் விமானமொன்று யெமன் நாட்டில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த போர் விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாக யெமனிலுள்ள ஹூதி படைகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மூலமே இப்போர்விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கி வீழ்த்தியதாக ஹூதி படைகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி சவூதி அரேபியா இதுவரையில் எந்த தகவலையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹூதி படைகளினால் 2015 இல் யெமன் நாட்டு ஜனாதியான ஹாதியையும் அவரது அமைச்சரவையையும் தலைநகர் சனாவில் இருந்து வெளியேற்றையதை தொடர்ந்து, ஜனாதியான ஹாதிக்கு சார்பாக இயங்கும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கும், ஹூதி படைகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள போரில் சுமார் 24 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

أحدث أقدم