சீனர்களுக்கு இந்தியா வருவதற்கான E-Visa தற்காலிகமாக ரத்து!


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் இதுவரையில் 300 இருக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அமெரிக்கா உற்பட சில உலக நாடுகளில் சீனர்கள் தமது நாட்டிற்கு பிரவேசிப்பது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்,  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகரிக்கும் மரணங்களாலும், நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலும் இந்தியா சீன கடவுசீட்டு வைத்திருப்பவர்களுக்கான விமான நிலையத்தை வந்தடைந்த பின் வழங்கப்படும் E-Visa முறையினை உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதனால் சீனர்கள் E-Visa மூலம் இந்தியாவினுள் நுழைய முடியாது.

இதனால் சீனர்கள் மாத்திரமின்றி சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்களும் E-Visa முறையினை பயன்படுத்தி இந்தியாவினுள் நுழைய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு இந்தோனேசியாவில் பதிவானது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து இந்தோனேசியாவிற்கு வருகை தந்த சீன பிரஜை ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சீனாவில் வசிப்பவர்கள் கட்டாயத் தேவை காரணமாக இந்தியாவிற்கு வருகை தர வேண்டுமெனின் சீனாவிலுள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அதற்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்ற பின்னரே வருகைதர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
أحدث أقدم