விருப்பமற்ற தொழில் செய்வதற்கான 8 அறிகுறிகள்!


உங்களில் எதனை பேர் நீங்கள் செய்யும் தொழிலை மனதார விரும்பி செய்கிறீர்கள் என்று உங்களை தவிர வேறு யாராலும் இலகுவில் கூறிவிட முடியாது. சிலர் தாம் செய்யும் தொழிலை மிகவும் விருப்பத்துடன் செய்வதோடு சிலர் உண்மையில் நாம் விரும்பி தான் இந்த தொழிலை செய்கிறோமா என்று தெரியாமலேயே தினமும் வேலைக்கு செல்கிறார்கள். சிலர் தமது இலக்குகளை நோக்கிய செல்லும் பாதையிலும், சிலர் இலக்குகளை அடைந்த நிலையிலும் பல்வேறுபட்ட துறைகளில் தொழில்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் பொதுவானது. பிடித்த வேலையாக இருந்தாலும் சரி, பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி அதிகரித்த வேலைப்பளுவினால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.  எனினும் ஒருவர் விரும்பாமல் செய்யும் வேலை ஏற்படுத்தும் உள ரீதியான பாதிப்புக்கள் அதிகம் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

நீங்கள் விரும்பாமல் ஒரு தொழில் செய்வதற்கான 8 அறிகுறிகள்:

1. நீங்கள் செய்யும் வேலையில் நேர்மறை எண்ணங்கள் அற்றுப்போதல். உங்கள் தொழில் பற்றி நீங்களே எதிர்மறையாக பேசுதல்.

2. வார நாட்கள் முழுவதும் வேலையில் ஏற்படும் களைப்பை போக்க வார இறுதி நாட்கள் முழுவதும் செலவழித்தல்.


3. வாரத்தில் கிடைக்கும் லீவு நாட்கள் முடிந்ததும், பொதுவாக ஞாயிரு தினம் இரவுகளில் மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்ற உணர்வு.

4. வேலையில் இருந்து ஓய்வு பெற இன்னும் பல வருடங்கள் இருந்தும், ஓய்வு பெறுவது பற்றி நிதமும் சிந்தித்தல்.

5. வேலை செய்யும் நாட்களில் உங்கள் தூக்கம் வெகுவாக குறைந்து செல்தல் அல்லது மன அழுத்தத்தால் தூக்கம் பாதிக்கப்படுதல்.

6. அடிக்கடி நோய்வாய்ப்படுத்தல். ஆய்வுகளின் படி, வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நீங்கள் விரும்பாத அலுவலக சூழலில் ஏற்படும் உள ரீதியான பாதிப்புகள் உங்கள் உடலை பலவீனப்படுத்தும்.

7. அதிகளவு லீவு எடுத்தல். நீங்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்க தோனும். காலை எழுந்தது முதல் வேலைக்கு செல்லும் வரை இன்று வேலைக்கு போக முடியாது என அடிக்கடி மனதுக்குள் ஏற்படும் குழப்ப நிலை.

8. அலுவலகத்தில் இருப்பவர்களை பிடிக்காமல் போதல் அல்லது மொத்த அலுவலகத்தையும் வெறுப்புடன்பார்த்தல். இதனால் அடிக்கடி எரிச்சலடைதல்.

நீங்கள் தற்போது செய்யும் தொழிலில் இவ்வாறான அறிகுறிகள் அனைத்தும் தென்பட்டால், அது உங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய முக்கியமான காலகட்டமாகும். இதனால் நீங்கள் உங்களுக்கு விரும்பிய தொழில் ஒன்றை தேடி உங்கள் எதிர்காலத்தை வெற்றிகரமானதாக நகர்த்த முடியும். அத்துடன், உங்கள் தொழில் வழங்குநருக்கும் உங்களுக்கு பதிலாக குறித்த பதவிக்கு மிகவும் பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும்.

உங்களுக்கு மனதுக்கு பொருத்தமான தொழில் ஒன்றை செய்வதால் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான முறையில் அமைத்துக்கொள்ள முடியும்.
أحدث أقدم