அண்டார்டிக்காவின் சில பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் இரத்தம் படிந்தவை போல தோற்றமளிக்கும் படங்கள் சமூக ஊடகங்களின் பகிரப்பட்டு வருகின்றன.
உண்மையில் இந்த பனிப்பாறைகள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதை அந்த பகுதியை சேர்ந்த ஆய்வாளர்களும் உறுதிசெய்துள்ளனர். எனினும் பனிப்பாறைகள் இவ்வாறு சிவப்பு நிறமாக மாற என்ன காரணம் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், அண்டார்டிக்காவின் பனிப்பாறைகள் இவ்வாறு சிவப்பு நிறத்தில் இரத்தம் படிந்தவை போல காட்சியளிப்பதற்கான காரணம் ஆய்வாளர்களால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பனிப்பாறைகள் இவ்வாறு சிவப்பு நிறத்தில் இரத்தம் படிந்தவை போல தென்படுவதற்கான காரணம் ஒருவகை அல்காக்களின் (Algae)தொழிற்பாடு என்பது தெரியவந்துள்ளது.