கொரோனா வைரஸ் - இலங்கையில் பதிவான 2 வது சம்பவம்; அரச பாடசாலைகளுக்கும் பூட்டு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் கொழும்பிலுள்ள ஓர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நோயாளியுடன் தங்கியிருந்த மற்ற ஒருவருக்கும் இதன் தொற்று ஏற்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

குறித்த நபர் 44 வயதுடைவர் எனவும், அவரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தினை கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சினையை ஒரு தேசிய பொறுப்பாக கருதி செயற்படுமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நட்டு மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
أحدث أقدم