கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையின் 2 வது நோயாளியும் குணமடைந்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையின் 2 வது நோயாளியும் குணமடைந்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் நேற்று வரை 43 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 15 பேர் நேற்றைய தினம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இதற்கென தயார்படுத்தப்பட்ட விஷேட நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த பலரும் விஷேட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைக்குள் வரும் விமானங்களை சில நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டிருந்த அரச பொது விடுமுறையினை மேலும் 3 நாட்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
أحدث أقدم