இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று மேலும் 8 கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் பதிவாகியுள்ளனர். இவர்கள் 8 பேரும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இதுவரையில் 51 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த நிலையில் ஒருவர் இதிலிருந்து குணமடைந்துள்ளார். தற்போது 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலும், நீர்கொழும்பு-கொச்சிக்கடை பகுதியிலும் இன்று மாலை 4:30 மணி தொடக்கம்  அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
أحدث أقدم