உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,000 தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 200,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 82,802 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரையில் 152 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்தியாவிற்கு வெளியில் 276 வெளிநாட்டு இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இதில் 255 பேர் ஈரான் நாட்டில் உள்ள இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியில் இருந்து வந்த ஓர் குடும்பத்தினர் முன்னெச்சரிக்கைகளை பொருட்படுத்தாது வெளியில் சென்றமை இதற்கு காரணமாக கருதப்படுகிறது.