கொரோனா வைரஸ் காற்றில் பரவும் அபாயம்!


CoViD-19 நோய் தொற்றினை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், கறைபடியாத இரும்பு மற்றும் பிளாஸ்டிக் மேற்பரப்புக்களில் சில நாட்களுக்கும், காற்றில் சில மணி நேரங்களுக்கும் நிலைத்து நின்று தொற்று நோயினை ஏற்படுத்தக்கூடியதாக புதிய ஆய்வொன்றில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி New England Journal of Medicine (NEJM)  எனப்படும் புதிய இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த தகவலின் படி, SARS-CoV-2 கொரோனா வைரஸ் கறைபடியாத இரும்பு மற்றும் பிளாஸ்டிக் மேற்பரப்பில் மூன்று நாட்களுக்கும், கார்போர்ட் மேற்பரப்பில் 24 மணி நேரங்களுக்கும் நிலைத்துநிற்கக் கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வுகளின் போது, இந்த வைரஸ் சுமார் 3 மணி நேரம் காற்றில் நிலைத்து நின்றுள்ளதாகவும், அதன் போது கொரோனா வைரஸ், தொற்றினை ஏற்படுத்தும் வீரியத்துடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த கருத்துக்கள் பலரதும் கவனத்தை ஈர்த்தை அடுத்து, சில ஆய்வாளர்களினால் இது மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
أحدث أقدم