அமெரிக்க ராணுவத்தின் மூலமே கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதாக சீன அரசின் பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுஹான் நகருக்கு அமெரிக்க ராணுவத்தினர் மூலமே இந்த வைரஸ் கொண்டுவரப்பட்டிருக்கலாம் மற்றும் இந்த வைரஸின் தொடக்கம் வுஹான் நகரம் இல்லை எனவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் வுஹான் நகரில் அண்மையில் நடைபெற்ற உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்த அமெரிக்க (ராணுவ) விளையாட்டு வீரர்களால் கடந்த ஆண்டில் இந்த வைரஸ் சீனாவினுள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தான் இந்த வைரஸ் தோற்றம் பெற்றதாகவும், சீனாவின் வுஹானில் இது பரவுவதற்க்கு முன்னர் இது அமெரிக்காவில் பரவி மரணங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரொபட் ரெட்பீல்ட் மார்ச் மாதம் 11ம் திகதி வெளியிட்டுள்ள தகவலை மேற்கோள் காட்டியே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.